வேலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி குடியாத்தம் தொகுதியில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 642 ஆண் வாக்காளர்களும் 1 லட்சத்து 50 ஆயிரத்து 355 பெண் வாக்காளர்களும் மூன்றாம் பாலினத்தினர் 43 பேரும் என மொத்தமாக 2 லட்சத்து 91 ஆயிரத்து 40 வாக்காளர்கள் இருக்கின்றார்கள். குடியாத்தம் தொகுதியில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக இருக்கின்றனர்.

குடியாத்தம் சட்டமன்ற தொகுதி இறுதி வாக்காளர் பட்டியலை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கும் நிகழ்ச்சியானது நேற்று தாலுகா அலுவலகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தாசில்தார் விஜயகுமார் தலைமை தாங்கி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் துணை தாசில்தார், நகர்மன்ற தலைவர், அதிமுக நகர செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் என பலர் பங்கேற்றனர்.