தெலுங்கானா மாநிலம் கேசவகிரி மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு உடல் நல கோளாறு ஏற்பட்டுள்ளது இவருக்கு திருமணம் முடிந்த மூன்று மாதங்களே ஆன நிலையில் ஏதேனும் தீய சக்திகளால் இப்படி ஆகியிருக்கலாம் என்ற மாமியாரின் அறிவுரைப்படி அவரது கணவர் அந்த பெண்ணை சாமியார் ஒருவரிடம் அழைத்து சென்றுள்ளார். அந்த சாமியார் அந்தப் பெண்ணை 5 பேய்கள் பிடித்திருப்பதாக கூறி சிறப்பு பிரார்த்தனை செய்ய வேண்டும் என தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார். ஆனால் அந்தப் பெண் வீட்டிற்கு வந்து நடந்துவற்றை தனது கணவன் மற்றும் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் அந்த பெண்ணை யாரிடமும் இது பற்றி கூறக்கூடாது என்று கண்டித்ததோடு ஒரு அறையில் வைத்து பூட்டி விட்டனர். அந்தப் பெண் தனது சகோதரிக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்க அவர்கள் கொடுத்த புகார் அடிப்படையில் போலி சாமியாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். புகார் கொடுக்கப்பட்டதை அறிந்த அந்த போலி சாமியார் மகாராஷ்டிராவிற்கு தப்பி சென்றதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் போலி சாமியாரை வலை வீசி தேடி வருகின்றனர்.
“5 பேய் பிடிச்சிருக்கு” பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம் பெண்…. போலி சாமியாருக்கு வலைவீச்சு….!!
Related Posts
“கர்ப்பிணினு தெரிஞ்சதும் மாத்திரையைக் கொடுத்து கொன்னுட்டாங்க!”.. வீட்டு வேலை செய்த 18 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை… பாகிஸ்தானில் அரங்கேறிய கொடூரம்..!!
பாகிஸ்தான் நாட்டின் லாகூர் பகுதியில் உள்ள ஒரு பணக்கார வீட்டில் வீட்டு வேலை செய்து வந்த ஆயிஷா என்ற 18 வயது இளம் பெண், அந்த வீட்டின் முதலாளி மகன் மற்றும் அவரது கார் டிரைவரால் தொடர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு…
Read moreசவுதியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகளுக்கு விழுந்ததா முட்டுக்கட்டை?.. 5 விசாக்கள் மட்டுமே என புதிய ஸ்டார்ட்-அப்களுக்கு கிடுக்கிப்பிடி…!!!
சவுதி அரேபியாவின் மனித வளம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் ‘கிவா’ தளம், அந்நாட்டில் புதிதாகத் தொடங்கப்பட்ட நிறுவனங்களுக்கான உடனடி வேலை விசாக்களின் உச்ச வரம்பைக் கணிசமாகக் குறைத்துள்ளது. இதன்படி, இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவாகச் செயல்பட்டு வரும் புதிய நிறுவனங்கள் அல்லது…
Read more