தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரமான ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள பெரிய அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 73 பேர் பலியாகினர்.

தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரமான ஜோகன்னஸ்பர்க்கில் 5 மாடிகளைக் கொண்ட ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்திய நேரப்படி அதிகாலை 5 மணியளவில் தீ பற்றியது. இந்த தீ விபத்து குறித்து நள்ளிரவு 1.30 மணியளவில் தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்தது.

 

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இன்று காலை தீ முழுவதுமாக அணைக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் கட்டிடத்தில் இருந்து புகை வெளியேறி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

 

தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி உடனடியாக தொடங்கப்பட்ட போதிலும், 73 பேர் இதுவரை உயிரிழந்தனர். இதுவரை 73 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 52 பேர் தீக்காயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் உடலை சாலையில் வரிசையாக வைக்கப்பட்டதை பார்க்கும்போது இதயத்தை ரணமாக்குகிறது.

கட்டிடத்தில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. கட்டிடத்தின் ஒழுங்கற்ற வடிவமைப்பு காரணமாக, தீ விபத்து ஏற்பட்டதில் பலர் கட்டிடத்திற்குள் சிக்கிக்கொண்டனர். இதனால் அவரால் வெளியேற முடியவில்லை என்று கூறப்படுகிறது.