சமீப காலங்களாக இளம் வயது மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பிட்னஸ் பிரபலம் ஒருவர் 33 வயதில் மாரடைப்பால் மரணமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் லரிசா போர்கேஸ். பிட்னஸ், பேஷன், டிராவல் குறித்த பதிவுகளை அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.

இவரது பிட்னஸ் சம்பந்தமான பதிவுகள் இளைய தலைமுறையினரை ஈர்க்கவே, வெகு விரைவில் லட்சக்கணக்கான பாலோயர்ஸ் குவிந்தனர். மாரடைப்பால் ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மறைவிற்கு ரசிகர்கள், தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.