கம்போடியா நாட்டின் மேற்கு பகுதியில் கம்போங் ஸ்பியூ மாகாணம் அமைந்துள்ளது. இங்கு அந்த நாட்டின் மிகப்பெரிய ராணுவ தளம் அமைந்துள்ளது. இங்கு வெடிப்பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென வெடிப்பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்ட இடத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த பயங்கர விபத்தில் 20 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதோடு பலர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த தகவலை அந்நாட்டின் பிரதமர் ஹன் மானெட் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.