பூமியிலிருந்து 124 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள சிவப்பு குள்ள நட்சத்திரத்தைச் சுற்றி வரும் K2-18b என்ற கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான வாய்ப்புகளை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டறிந்துள்ளது. பூமியை விட 2.6 மடங்கு பெரிதான K2-18b கடல்கள் சூழ அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் வளிமண்டலத்தில் உயிர்களால் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் டைமெதில் சல்பைடு வாயு இருப்பதும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.