இலங்கையில் மனித உடல் அமைப்பை கொண்ட ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்த நிலையில் இணையத்தில் இந்த செய்தி வைரலாகி வருகிறது. இலங்கையின்  தெனியாய – விஹாரஹேன, செல்வகந்த  பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வளர்க்கப்பட்ட ஆடு இந்த அபூர்வ ஆட்டுக்குட்டியை ஈன்றுள்ளது. ஆனால் பிறந்த சில நிமிடங்களிலேயே இந்த ஆட்டுக்குட்டி உயிரிழந்தது. தற்போது இந்த ஆட்டுக்குட்டியின் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.