சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில் இன்று மாலை விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி தற்போது 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 880 வரையில் குறைந்து ஒரு சவரன் 1,11,600 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,950 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இன்று காலை தங்கம் விலை அதிகரித்த நிலையில் தற்போது விலை குறைந்துள்ளது நகைப் பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
