புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரிமளம் பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்த சீட்டு கட்டுகள், 2000 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.