சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி அருகே இருக்கும் கிராமத்தில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் இருக்கும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனை தெரிந்து கொண்ட மேலும் 5 பேர் சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர்.

அதில் ஒருவர் சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் செல்வராஜ், சிவக்குமார், பொன்னுச்சாமி, சிவா, செல்வம், செந்தில்குமார் ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் செல்வராஜ், பொன்னுசாமி, சிவகுமார் ஆகிய மூன்று பேருக்கும் தலா 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ஏழாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

இதனையடுத்து செந்தில்குமாருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 33 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். மேலும் தமிழக அரசு சார்பில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 6 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். மற்ற இரண்டு பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.