தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி பகுதியில் 33 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த மார்ச் மாதம் ஆறாம் தேதி ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலிருந்த செல்போன் எண்ணை வாலிபர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் கூறியதை நம்பி வாலிபர் பல்வேறு தவணைகளாக 69 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணத்தை முதலீடு செய்தார்.

இந்நிலையில் 4 மாதங்கள் கடந்த பிறகும் முதலீடு தொகையும், அதற்கான லாபமும் கிடைக்கவில்லை. சம்பந்தப்பட்ட நபரின் செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த வாலிபர் தஞ்சை போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.