தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியிலிருந்து நீக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் ஹாசன் தொகுதி MP பிரஜ்வால், பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ள நிலையில், நாளை JD(S) உயர்மட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்குப் பிறகு அவர் நீக்கப்படுவார் எனக் கட்சித் தலைவர் குமாரசாமி அறிவித்துள்ளார்