ஒரு சமூகத்தின் உண்மையான மனிதநேயம் என்பது, மற்றவர்கள் துயரப்படும் தருணங்களில் நாம் காட்டும் அக்கரையில் தான் வெளிப்படுகிறது. அசாமைச் சேர்ந்த ஒரு நபர், கொட்டும் மழையில் தன் கடமையைச் செய்து கொண்டிருந்த போக்குவரத்து பெண் காவலருக்குச் செய்த உதவி, இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியர்களின் இதயங்களையும் நெகிழ வைத்துள்ளது.
சுட்டெரிக்கும் வெயிலோ அல்லது உறைபனி மழையோ, எதுவாக இருந்தாலும் சாலையில் நிற்கும் காவலர்களின் பணி என்பது எளிதானது அல்ல. அன்றாட அவசர வாழ்க்கையில் அவர்களைக் கடந்து செல்லும் எத்தனையோ மனிதர்களுக்கு மத்தியில், அந்தப் பெண்ணின் கஷ்டத்தைப் புரிந்து கொண்டு அவருக்கு உதவ முன்வந்த அந்த நபரின் செயல், மனிதநேயம் இன்னும் உயிர்ப்போடு தான் இருக்கிறது என்பதை உரக்கச் சொல்லியிருக்கிறது.
அசாம் மாநிலத்தில் கனமழை பெய்து கொண்டிருந்த ஒரு நாளில், அங்கே இருந்த ஒரு போக்குவரத்து பெண் காவலர் எந்தவிதமான மழைக்கவசமும் இல்லாமல், மழையில் நனைந்தபடியே தன் கடமையைச் செய்து கொண்டிருந்தார். சாலையில் செல்லும் வாகனங்களை ஒழுங்குபடுத்துவதே அவரது ஒரே இலக்காக இருந்தது.
அப்பொழுது அந்த வழியாக காரில் வந்த ஒரு நபர், மழையில் நனைந்து கொண்டே நின்றிருந்த பெண் காவலரைக் கண்டு மனம் பொறுக்காமல், காரை ஓரமாக நிறுத்தினார். பின்பு, தான் வைத்திருந்த புத்தம் புதிய மழைக்கவசத்தை எடுத்துக்கொண்டு அவரிடம் சென்று அதை அன்போடு பரிசளித்தார். எதிர்பாராத இந்த நெகிழ்ச்சியான செயலால் அதிர்ந்துபோன அந்த பெண் காவலர், அந்த நபருக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்த நெகிழ்ச்சியான தருணத்தை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது காட்டுத்தீ போல பரவி அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. “அன்பை வெளிப்படுத்த பெரிய விஷயங்கள் தேவையில்லை, சிறிய அக்கறையே போதுமானது” என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு மிகச்சிறந்த சான்றாக மாறியுள்ளது.
நாம் அன்றாடம் கடந்து செல்லும் ஒவ்வொரு மனிதனின் உழைப்பிற்கும் மதிப்பளிப்பதும், அவர்களுக்கு நம்மால் இயன்ற சிறிய உதவிகளைச் செய்வதும் தான் மனிதகுலத்தின் உண்மையான அழகு என்பதை இந்த அசாம் மனிதர் தனது அன்பான செயலால் உலகிற்கு உணர்த்தியுள்ளார்.
See this Instagram video by @leki_goswami01 https://t.co/Sm21oI2t3l
“>
