பெற்ற பிள்ளைகளை மிகவும் கஷ்டப்பட்டுப் படிக்க வைத்து, சமூகத்தில் பெரிய ஆளாக உயர்த்திய ஒரு தகப்பனுக்கு, அவர் வாழ்நாளின் இறுதியில் கிடைத்த பரிசு பெரும் ஏமாற்றமும் சோகமும்தான். தன் வாழ்நாள் முழுவதையும் மகள்களின் எதிர்காலத்திற்காகவே தியாகம் செய்த அந்தத் தந்தை, வயதான காலத்தில் ஆதரவற்று உயிரிழந்த சம்பவம் அனைவரின் நெஞ்சையும் பதற வைத்துள்ளது.

மூன்று மகள்களையும் நல்ல நிலையில் கரைசேர்க்க வேண்டும் என்பதற்காகத் தன் சொந்த ஆசைகள், தேவைகள் என அனைத்தையும் மறந்து உழைத்தவர் அவர். ஆனால், அவர் இறந்த செய்தி கேட்டு ஓடிவர வேண்டிய மகள்கள், தங்களின் பிஸியான வாழ்க்கையைக் காரணம் காட்டி வர மறுத்துவிட்டனர்.

தந்தை இறந்துவிட்ட செய்தி மகள்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் நேரில் வந்து தந்தையின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த முன்வரவில்லை. மாறாக, இறுதிச் சடங்குகளைச் செய்து முடிப்பதற்காக வெறும் 5,100 ரூபாயை மட்டும் ஆன்லைன் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், தங்களால் நேரில் வர முடியாது என்றும், இறுதிச் சடங்குகளை அப்படியே ‘வீடியோ கால்’ மூலம் நேரடியாகக் காட்டுமாறும் கேட்டுக்கொண்டனர். தங்கள் சொந்த தந்தையின் இறுதி ஊர்வலத்தையும், தகனக் கிரியைகளையும் கைப்பேசி திரையின் வழியாகவே பார்த்து முடித்துக் கொண்டனர்.

தன் வாழ்நாளை அர்ப்பணித்து வளர்த்த பிள்ளைகள், தான் இறந்த பிறகாவது தன் முகத்தைப் பார்க்க வரமாட்டார்களா என்று ஏங்கிய அந்தத் தந்தையின் ஆன்மா, இந்தச் செயலால் உறைந்து போயிருக்கும். சுற்றிலும் இருந்த கிராம மக்களும் உறவினர்களும் இந்த மனசாட்சியற்ற செயலைக் கண்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தனர்.

பெற்ற பாசத்தையும், தியாகத்தையும் வெறும் 5,100 ரூபாயில் மதிப்பிட்டு, வீடியோ காலில் இறுதிச் சடங்கைப் பார்த்த இந்தச் சம்பவம், இன்றைய நவீன உலகத்தில் மனித உறவுகளும் பாசமும் எவ்வளவு பலவீனமாகி வருகின்றன என்பதைப் பிட்டுப் பிட்டு வைப்பதாக அமைந்துவிட்டது.