தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரில் நடந்த விவாதங்களை மையமாக வைத்து, திமுக தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சட்டமன்றத்திற்கு வெளியே வந்து எந்தவொரு விஷயத்தையும் சுயமாகப் பேசத் தெரியாமல், தனியாகக் குழு எழுதித் தரும் காகிதக் குறிப்புகளைப் பார்த்தே அவர் பேட்டி அளிப்பதாக நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அவைக்குள் நடக்கும் விவாதங்களை எதிர்கொண்டு சுயமாகப் பேசத் திராணியில்லாத அவர், எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை வகிக்க முற்றிலும் தகுதியற்றவர் என்று சமூக வலைதளங்களில் பொதுமக்கள் மற்றும் இணையப் பயனர்கள் கொந்தளித்து வறுத்து எடுத்து வருகின்றனர்.
ஊடகங்களாலும் ஆதரவாளர்களாலும் செயற்கையாகப் பெரிதுபடுத்தப்பட்ட ஒரு வெற்றிப் பலூன் மட்டுமே அவர் என்றும், அவரிடம் உரிய கருத்தியல் தெளிவு சுத்தமாக இல்லை என்றும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
திடீர் சமையல் மற்றும் திடீர் சாமியார் போல, அவசரமாகத் தயாரிக்கப்படும் ஸ்கிரிப்ட் தாள்களை நம்பியே அவரது அரசியல் பயணம் உள்ளதாகவும் அவர்கள் கிண்டலடித்துள்ளனர்.
சட்டமன்றத்தை விட்டு வெளிய வந்தவுடன் உடனடியாக ஸ்கிரிப்ட் எழுதி தரும் அந்த ஐந்து பேர் கொண்ட குழுவை பாராட்டி தான் ஆகணும்…
திடீர் சாமியார், திடீர் சமையல் என்பதைப் போல “திடீர் ஸ்கிரிப்ட் பேப்பர்” தான் உதயநிதி அவர்களுடைய அரசியல் வாழ்க்கையாக இருக்க போகின்றது.
சட்டமன்றத்தை விட்டு… pic.twitter.com/fIdvfs3qlF
— Urimai Kalam TV (@Peruvazhuthiyar) August 6, 2026
“>
ஆளுங்கட்சியையும் அதன் தலைவர்களையும் குறிவைத்து இணையத்தில் வைரலாகி வரும் இந்த அதிரடியான கருத்துக்களும் விமர்சனங்களும் தற்போது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
