ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக மற்றொரு புதிய கவர்ச்சிகரமான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி 148 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் 12 ஓடிடிகளை இலவசமாக பார்க்கலாம். இது ஒரு டேட்டா பேக் திட்டம் ஆகும். 148 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் 10 ஜிபி டேட்டா கிடைக்கும். சோனி லைவ், ஜி 5, ஜியோ சினிமா பிரீமியம், டிஸ்னி பிளஸ், சன் நெக்ஸ்ட் உள்ளிட்ட மொத்தம் 12 ஓடிடிக்களை நீங்கள் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.