இந்தியாவில் மக்கள் பலரும் தற்போது ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதிலும் குறிப்பாக ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் அதாவது பணம் செலுத்துவது, மின்சார கட்டணம் செலுத்துவது, சிலிண்டர் புக் செய்வது மற்றும் தியேட்டர் டிக்கெட் புக்கிங் போன்ற அனைத்து சேவைகளுக்கும் மொபைல் போன் என்பது கட்டாயமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் முன்னணி நெட்வொர்க் நிறுவனங்களான ஜியோ, வோடாபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகின்றன.

வோடபோன் ஐடியா:

வோடபோன் ஐடியா நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 401 ரூபாய்க்கு ரீசார்ஜ் திட்டத்தை விளங்குகின்றது. இதில் 50 gb டேட்டா, வரம் மற்ற அழைப்பு மற்றும் 3000 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் கிடைக்கின்றன. இதில் தினமும் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை வரம்பற்ற டேட்டாவை பெறலாம்.

ஏர்டெல்:

ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு 399 ரூபாய்க்கு ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகின்றது. இதில் 40 ஜிபி டேட்டா, நாள்தோறும் 100 எஸ்எம்எஸ் மட்டும் வரம் பெற்ற அழைப்புகள் கிடைக்கின்றன.

ஜியோ:

ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு 399 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் 75 ஜிபி வரை டேட்டா, வரம் பெற்ற 5g டேட்டா வழங்குகிறது. இதன் மூலம் பயனர்கள் மூன்று கூடுதல் சிம்களின் பலன்களை பெறலாம். மேலும் வரம்பற்ற அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவையும் கிடைக்கிறது.