ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓட்டுநராக பணியாற்றும் இந்தியருக்கு லாட்டரி 44 கோடி பரிசு விழுந்துள்ளது. முனாவர் பைரோஸ் என்ற இளைஞர் போதுமான சம்பளம் கிடைக்காததால் கடந்த ஐந்து ஆண்டுகளாக லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்துள்ளார். அவர் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 44 கோடி பரிசு என அறிவிக்கப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அவர் அந்த பணத்தை 30 பேருடன் பகிர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இனிமேல் நான் பணத்திற்கு பின்னல் ஓடிஏ வேண்டிய அவசியம் இருக்காது என கூறியுள்ளார்.