இந்தியாவில் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அனைவருக்கும் குறைந்த விலையில் சமையல் கேஸ் சிலிண்டர் வழங்கப்படுகிறது. அதேசமயம் வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு மத்திய அரசு சார்பாக 300 ரூபாய் மானியமும் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர் ஒரு வருடத்தில் 12 சிலிண்டர்களை மானிய விலையில் பெற்றுக் கொள்ள முடியும். அதேசமயம் பண வீக்கத்தை பொறுத்து ஒவ்வொரு மாதமும் சிலிண்டரின் விலையும் உயர்த்தப்பட்டு வரும் நிலையில் எப்படி மானியம் இல்லாமல் குறைந்த விலையில் தள்ளுபடி சிலிண்டர்களை பெறுவது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

அதன்படி இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் அடிக்கடி வாடிக்கையாளர்களுக்கு கேஷ் பேக் சலுகைகளை வழங்கி வருகின்றன. இந்த சலுகைகளை பயன்படுத்த ரொக்க பணத்தை கொடுத்து சிலிண்டர்களை வாங்காமல் அமேசான் பே, கூகுள் பே மற்றும் பேடிஎம் உள்ளிட்ட தளத்தின் மூலமாக முன்பதிவு செய்யலாம். இதன் மூலமாக நீங்கள் சலுகைகளை பெற்று தள்ளுபடி விலையில் சிலிண்டர்களை வாங்க முடியும்.