புத்தாண்டை முன்னிட்டு இண்டிகோ நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை அறிவித்துள்ளது. அதன்படி அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் வசூலிக்கப்படும் டிக்கெட் கட்டணத்தில் எரிபொருள் கூடுதல் கட்டணம் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளது. விமான எரிபொருளின் விலை உயர்வின் காரணமாக இண்டிகோ நிறுவனம் எரிபொருள் கூடுதல் கட்டணத்தில் 2023 ஆம் வருடம் அக்டோபர் மாதம் முதல் அமல்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது இந்த கட்டணத்தை நீக்கிய பிறகு விமான டிக்கெட் விலை கணிசமாக குறையும். மத்திய அரசு விமான எரிபொருள் விலையை குறைத்த பிறகு 2024 ஜனவரி 4 முதல் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை நீக்க இண்டிகோ நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி எரிபொருள் கூடுதல் கட்டணத்தின் கீழ் 50 கிலோ மீட்டருக்கு குறைவான பயணத்திற்கு ரூ.300 முதல் ரூ.500, 1000 கிலோமீட்டர் தூரத்திற்கு  400, 1001 கிமீ முதல் 1500 கிமீ வரையிலான பயணத்துக்கு ரூ. 550, 1501 கிமீ முதல் 2500 கிமீ வரை பயணத்துக்கு ரூ. 550 என்ற அளவில் எரிபொருள் கூடுதல் கட்டணம் உள்ளது.