இந்தியாவில் விவசாயிகள் அனைவரும் பயன்பெறுவதற்காக பி எம் கிசான் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வரும் நிலையில் இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வரும் நிலையில் சொந்த நிலம் வைத்துள்ள விவசாயிகள் தங்கள் நிலத்திற்கான விவசாய பொருட்களை மானிய விலையில் பெற்றுக்கொள்ள இந்த திட்டத்தில் பணம் வழங்கப்படுகிறது.

இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 15 தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில் 16வது தவணை எப்போது வழங்கப்படும் என விவசாயிகள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டில் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக 2000 ரூபாய் பணம் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது