சொத்து ஆவணங்கள், நகைகள், கடன் ஆவணங்கள், சேமிப்புப் பத்திரங்கள் மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் பிற முக்கிய ரகசியப் பொருட்களை சேமித்து வைக்க மக்கள் பேங்க் லாக்கர்களை பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் துணை சேவைகளில் இதுவும் ஒன்றாகும். பொதுத்துறை, தனியார் வங்கிகளில் உள்ள லாக்கர்களை அந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்தி பயன்படுத்தலாம்.

ஆனால் அண்மைக் காலமாக இந்த நிலை மாறி வருவதாகவும், மியூச்சுவல் பண்ட், காப்பீடு போன்ற திட்டங்களில் முதலீடு செய்தால் தான் லாக்கர் தரப்படுமென வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் நிபந்தனை விதிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.