திருநெல்வேலி மாவட்டம் பேட்டை பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி சேவல் ஒன்றை வாங்கியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக அந்த சேவலை வீட்டில் பாசத்துடன் வளர்த்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக சேவல் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால் சேவல் உயிரிழந்த நிலையில் வீட்டில் ஒருவராக வளர்க்கப்பட்ட சேவல் உயிரிழந்த துக்கம் தாங்காமல் செல்வம் மனமடைந்துள்ளார்.
இதனை தொடர்ந்து சிங்கம் என பெயரிடப்பட்ட தன் சேவல் உயிரிழந்ததை துக்கம் தெரிவிக்கும் வகையில் செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் சேர்ந்து மனிதர்களுக்கு வைக்கும் கண்ணீர் அஞ்சலி பேனர் போல சேவலுக்கும் கண்ணீர் அஞ்சலி பேனர் அடித்து ஒட்டி உள்ளனர். அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில், சேவலின் தோற்றம் மற்றும் மறைவு குறிப்பிடப்பட்டதுடன், தங்கள் ’சிங்கம்’ என அழைக்கப்படும் சேவல் மறைந்ததை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிக்கும் ஜி.கே.எம் பாய்ஸ், பேட்டை என அவர்கள் ஊருடன் சேர்ந்து குறிப்பிடப்பட்டுள்ளது.
