பிரபல காமெடி நடிகர் கிங்காங் மூத்த மகள் சக்தி பிரியா பிளஸ் 2 தேர்வு எழுதி இருந்த நிலையில் அவர் 600 க்கு 404 மதிப்பெண் எடுத்துள்ளார். இந்த வெற்றியை குடும்பத்துடன் கொண்டாடிய பிறகு கிங்காங் கூறுகையில், எனது மகள் எங்களை பெருமைப்பட செய்துள்ளார். அவளின் கனவை நிறைவேற்றுவது தான் எங்களின் விருப்பம். கல்லூரி அவருக்கு பிடித்த படிப்பை படிக்க வைப்போம் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.