இந்தியாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அதிக ஊதியத்தில் ஓய்வூதியத்திற்கான விருப்பத்தேர்வு அல்லது கூட்டு விருப்பங்களுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகு முதலாளிகள் அதிக ஓய்வூதியத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் பணி 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் பலமுறை கால அவகாசம் வழங்கப்பட்ட நீட்டிக்கப்பட்டது.

ஆனால் தற்போது வரை பலரும் விண்ணப்பிக்காமல் இருப்பதால் மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2024 ஆம் ஆண்டு மே 31ம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் மூன்று புள்ளி ஆறு லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதாகவும் 17.49 லட்சங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.