இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகி விட்டனர். அதில் உள்ள பல அம்சங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பலரும் தெரியாமல் உள்ளனர். அதாவது போனில் Flight mode என்ற ஆக்சன் இருக்கும். இதனை விமானத்தில் பயணிக்கும் போது பயன்படுத்துவதற்காக என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இதனை பல வழிகளில் பயன்படுத்தலாம். விமானத்தில் பயணிப்பதற்கு முன்பு உங்களுடைய போன்களை பிளைட் மோடில் போடா அறிவுறுத்தப்படும். அப்படி செய்ததும் உங்களது போனை அருகில் உள்ள cellular, Wi-Fi networks, Bluetooth ஆகியவற்றால் கனெக்ட் செய்ய முடியாது. இதனால் எந்த ஒரு அழைப்பும் உங்களுக்கு வராது. சமூக வலைத்தளங்களின் செய்திகளை பகிர முடியாது.

நீங்கள் இணையத்தையும் பயன்படுத்த முடியாது. ஆனால் இதனைத் தவிர புகைப்படம் எடுக்க, பாட்டு கேட்க மற்றும் செய்திகளை தயார் செய்ய நீங்கள் இதனை பயன்படுத்தலாம். மேலும் பேட்டரியை சேமிப்பதற்கு இந்த ஆப்ஷனை நீங்கள் பயன்படுத்தலாம். வயர்லெஸ் இணைப்புகளை துண்டிப்பதால் பேட்டரி சீக்கிரம் தீராது. பயணம் செய்து கொண்டிருக்கும்போது இந்த ஆப்ஷனில் போட்டு விடுவது சிறந்ததாக இருக்கும். அதனைப் போலவே உங்களுக்கு நேரம் குறைவாக இருந்து அதே சமயம் சீக்கிரம் பேட்டரியை சார்ஜ் செய்ய விரும்பினால் பிளைட் மோடில் போட்டுவிட்டு சார்ஜ் செய்யலாம். குழந்தைகளிடம் செல்போனை கொடுக்கும் போதும் இந்த ஆப்ஷனை நீங்கள் பயன்படுத்தலாம்.