உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் பொதுவிதமான அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதேசமயம் பயனர்களின் பாதுகாப்பிற்கு ஏற்றவாறும் பல அப்டேட்டுகள் வழங்கப்படும் நிலையில் வாட்ஸ்அப் செயலில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலியை போல விருப்பத்திற்கு ஏற்ப bright, dark mode செட் செய்து கொள்ள முடியும்.

இதனை வாட்ஸ் அப் வெப் பயனர்களுக்கு வழங்கும் வகையில் whatsapp நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வாட்ஸ் அப் வெப் பயனர்களும் விருப்பத்திற்கு தகுந்தது போல இந்த வசதிகளை செட் செய்து கொள்ளலாம் எனவும் இதனைப் போலவே இன்னும் ஏராளமான அப்டேட்டுகளை வாட்ஸ் அப் வெப் பயனர்களுக்கு வழங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது.