கார் ஓட்டுவதில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கூகுள் மேப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. 2020 ஆம் ஆண்டு கூகுள் மேப்ஸ் இன் Assistant Driving mode அம்சம் அதன் பக்கத்திலிருந்து நிறுத்தப்படும் என்று கூகுள் அறிவித்திருந்தது. ஆனால் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தான் இந்த அம்சத்தை நிறுத்தியது. கூகுள் மேப் அசிஸ்டன்ட் டிரைவிங் மோடு 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது போனில் உள்ள Dashboard தான் இது.

இதில் media suggestion, auto control and map போன்ற அம்சங்களை காண முடியும். இந்த நிலையில் இதற்கு மாற்றாக android auto வை பயன்படுத்தலாம். இது கூகுளின் தயாரிப்பாகும். கார் ஓட்டுவதற்கு வசதியாக இது வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில் ஆண்டிராய்டு மொபைலை காரின் entertainment board உடன் இணைக்க அனுமதிக்கின்றது.