யு பி ஐ மூலம் பணம் செலுத்துபவரா நீங்கள்? அப்போ உடனே இந்த செய்தியை படிங்க. இரண்டு நாட்களுக்குப் பிறகு அதாவது 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் உங்கள் யுபிஐ ஐடி மூடப்படலாம். இது தொடர்பாக இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், ஒரு வருடமாக UPI பயன்படுத்தாத வாடிக்கையாளர்களின் யுபிஐ ஐடியை செயலிழக்க செய்யும்படி கட்டண செயலிகள் கேட்டுக் கொண்டுள்ளன.

அத்தகைய வாடிக்கையாளர்கள் மீண்டும் கேஒய்சி செய்ய வேண்டும். இதன் கீழ் வங்கி கணக்கு எண் மற்றும் மொபைல் எண் சரிபார்க்கப்படும். வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இதனை சரிபார்க்கவில்லை என்றால் யுபிஐ பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.