பெண்களை மையப்படுத்தி மத்திய, மாநில அரசுகள் பல திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அந்த வகையில் தற்போது கர்ப்பிணி பெண்களுக்கு உதவும் விதமாக மத்திய அரசின் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா  என்ற திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலமாக கருவுற்ற தாய்மார்களுக்கு 6000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

கர்ப்பிணி பெண்கள் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் நல்ல உணவுகளை உட்கொள்ளும் விதமாகவும் மருத்துவ செலவுகளை சமாளிக்கவும் இந்த தொகை வழங்கப்படுகிறது. மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கு https://wcd.nic.in/schemes/pradhan-mantri-matru-vandana- yojana  என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ள பெண்களுக்கு உதவி தொகை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.