இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் மாணவர்கள் கல்வி வளர்ச்சிக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சிறுபான்மையினர் மாணவர்களுக்கு கல்விக்கான உதவித்தொகை வழங்கி அவர்களுடைய கல்வியை ஊக்குவிக்கும் செயல்பாடுகளை அரசு மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு சிறுபான்மையினர் மாணவர்களுக்கு வழங்கி வந்த கல்வி உதவித்தொகையை ரத்து செய்துள்ளது. இதனால் கர்நாடக முதல்வர் அவர்கள் சிறுபான்மை விதமானவர்களுக்கான கல்வி உதவித் தொகையை மாநில அரசு தன்னுடைய சொந்த நிதியிலிருந்து வழங்கும் என்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 6.4 லட்சம் சிறுபான்மையினர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக அரசு மாநில பட்ஜெட் ஒதுக்கீட்டில் ரூபாய் 40 கோடி மறு பங்கீடு செய்ய உத்திரவிடப்பட்டது. இதே போல சிறுபான்மையின மக்களுடைய குடியிருப்புகளை மேம்படுத்துவதற்காக ஆயிரம் கோடியில் புதிய செயல் திட்டங்கள் தயாரிப்பதற்கு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.