திருச்சி மாவட்டத்தில் உள்ள பஞ்சப்பூர் விநாயகா நகரில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் நவீன் குமார் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். தான் வருங்காலத்தில் விமானியாக ஆக வேண்டும் என்பதே நவீன் குமாரின் ஆசை. இந்நிலையில் 12-ஆம் வகுப்பில் நடத்தப்பட்ட முன் பருவ தேர்வுகளில் நவீன் குமார் குறைந்த மதிப்பெண் பெற்றதாக தெரிகிறது.

இதனால் விமானியாகும் ஆசை நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் நவீன் குமார் தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நவீன் குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.