இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான ஒரு வீடியோ, பெற்றோர்களுக்கு மிகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் பேசிய மருத்துவர், குழந்தைகளுக்கு 10 முதல் 12 வயது வரை டீ அல்லது காபி கொடுக்கக் கூடாது என்று கடுமையாக எச்சரிக்கிறார். இதுபோன்ற பானங்கள் குழந்தைகளின் உடலில் அயன் சத்து உறிஞ்சப்படுவதை தடுக்கும் என்றும், அதனால் பசியின்மை ஏற்பட்டு ஊட்டச்சத்து குறைபாடு வரும் என்றும் கூறுகிறார். இது குழந்தைகளின் உடல் வளர்ச்சியை பாதிக்கும் என்று விளக்குகிறார்.

மேலும், டீ மற்றும் காபியில் உள்ள கெஃபின் குழந்தைகளின் தூக்கத்தை கெடுத்து, அமைதியின்மை மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர் எச்சரிக்கிறார். இதனால் குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சி பாதிக்கப்படும். அதற்கு பதிலாக, குழந்தைகளுக்கு தண்ணீர் அதிகம் கொடுப்பது மிக முக்கியம் என்று அறிவுறுத்துகிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி, பல பெற்றோர்கள் இதை பகிர்ந்து கொண்டுள்ளனர்.