இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு சுவாரசியமான வீடியோ, காகங்களைப் பற்றிய பல ஆச்சரியமான தகவல்களை பகிர்ந்துள்ளது. காகங்கள் கூட்டமாக வாழும் பறவைகள், ஒரு காகம் இறந்தால் மற்றவை சேர்ந்து அஞ்சலி செலுத்துவதுபோல நடந்து கொள்ளும் என்று கூறப்படுகிறது. சிறுவயதில் கேட்ட பானைக்குள் காகம் கல்லை போட்டு தண்ணீர் குடித்த கதை உண்மையே என்று ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. மேலும், காகங்கள் பழிவாங்கும் உணர்வு கொண்ட உயிரினங்கள் என்றும், ஒரு நபர் ஒரு காகத்துக்கு தீங்கு செய்தால், அதை தன் கூட்டத்துக்கு தெரியப்படுத்தி, அடுத்த தலைமுறைக்கும் சொல்லி விடும் என்றும் வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது.

இதனால், அந்த நபரை பார்த்தால் காகங்கள் கத்தும் அல்லது கொத்தும் போன்ற செயல்களில் ஈடுபடும். அதேபோல, காகத்துக்கு உணவு வைப்பவருக்கு, அது மதிப்புமிக்க பொருளை (பளபளப்பானது போன்றவை) எடுத்து வந்து கொடுக்கும் பழக்கமும் உண்டு என்று கூறப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி, காகங்களின் அறிவுத்திறனை எடுத்துக்காட்டுகின்றன. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.