உள் தமிழகம் அதனை ஒட்டிய கேரளா பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவக்கூடிய நிலையில் தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. அந்த வகையில் நான்கு மணி வரை….  அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல புதுச்சேரி,  காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை அடுத்த மூன்று மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம்,

கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் மழைக்கு  வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையமானது தெரிவித்திருக்கிறது.