அமலாக்க துறையால் சட்டவிரோத பண பரிமாற்றத் தடை சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் மாதம்  கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியினுடைய நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி இன்றைய தினம் காணொளி காட்சி மூலம் சென்னை மாவட்ட முதன்மைஅமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக ராஜபடுத்தப்பட்டார்.

அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜியினுடைய நீதிமன்ற காவலை டிசம்பர் நான்காம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டு பிறப்பித்துள்ளார். இதனுடன் சேர்த்து அமைச்சர் செந்தில் பாலாஜி னுடைய நீதிமன்ற காவல் 11ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாத ஆவணங்களை….. அமலாக்கத்துறை வசம் உள்ளதாகவும்,  அந்த ஆவணங்களை தங்களுக்கு வழங்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் ஒரு மனு  நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த வழக்கில் இன்றைய தினம் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான  வழக்கறிஞர் ரமேஷ் பதில் மனுவை தாக்கல் செய்தார்.

அந்த பதில் மனுவில் இந்த வழக்கத்திற்கு தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட,  அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்புக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனை அடுத்து இந்த வழக்கினுடைய விசாரணையானது….. ஆவணங்களை  கோரிய மனு மீதான விசாரணை டிசம்பர் நான்காம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்தார்.