நடிகர் மன்சூர் அலிகான் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என அனைத்து மகளிர் காவல் நிலைய சார்பில் சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் மன்சூர் அலிகான் நடிகை திரிஷா குறித்து,  அவருடைய கண்ணியத்தை குறைக்கும் வகையில் பேசியது இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.  இது தொடர்பாக திரை பிரபங்கள் மட்டுமல்லாமல் திரைப்பட இயக்குனர்கள் சார்பிலும் மன்சூர் அலிகானுக்கு எதிர்ப்பு எழுந்து நிலையில்,

இதுகுறித்து மகளிர் ஆணையம் ஆனது காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜீவாலுக்கு, மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதையடுத்து ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளில் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தனலட்சுமி, சென்னையில் நுங்கம்பாக்கத்தில் இருக்கக்கூடிய நடிகர் மன்சூர் அலிகான் வீட்டில் சென்று சம்மன் வழங்கி உள்ளார்.  மன்சூர் அலிகான் வீட்டில் இல்லாததால் அவரது மனைவியிடம் மன்சூர் அலிகான் நேரில்  ஆஜராக வேண்டும் என சமன் வழங்கப்பட்டிருக்கிறது.