சென்னையை அடுத்த பூந்தமல்லி, சென்னீர்குப்பம் பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு நடந்த அந்தப் பயங்கர சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியது. 18 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த வழக்கில், கைதான நஜுப்தின் (36) என்பவன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் நீதிமன்றத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. அந்தப் பிஞ்சு உயிரைப் பறித்த அரக்கனுக்குச் சரியான தண்டனை கிடைத்தே தீர வேண்டும் என மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், இன்று மிக முக்கியமான அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது. குற்றவாளி நஜுப்தினுக்கு ஒன்றல்ல, இரண்டல்ல… மூன்று ஆயுள் தண்டனைகளை வழங்கி நீதிபதி அதிரடி உத்தரவிட்டார். “பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்குக் காலத்தே கிடைக்கும் நீதியே சமூகத்திற்குப் பலமான எச்சரிக்கை” என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. தண்டனை விவரத்தைக் கேட்டதும் தப்ப முடியாது என்பதை உணர்ந்த குற்றவாளி நிலைகுலைந்து போனார்.
