’ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு எதிராகப் புகார்கள் ஏதேனும் வந்திருந்தால், அது குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் தணிக்கை வாரியம் தங்களுக்குத் தெரிவிக்கவில்லை என்று தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் தனி நீதிபதி வழங்கிய உத்தரவில் எந்தத் தவறும் இல்லை என்றும், அந்த உத்தரவு தங்களுக்குச் சாதகமாக இருக்கும்போது வாரியம் இழுத்தடிப்பது ஏன் என்றும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் காரசாரமாக வாதிடப்பட்டது.
மேலும், தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவு நகல் முறையாகத் தங்களிடம் இதுவரை வழங்கப்படவில்லை என்றும், அது குறித்த தகவல் மட்டுமே வாய்மொழியாகத் தெரிவிக்கப்பட்டது என்றும் படக்குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர். முறையான ஆவணங்கள் இன்றி வெறும் தகவல்களை மட்டும் வைத்துக் கொண்டு காலதாமதம் செய்வதால், பெரும் முதலீடு செய்யப்பட்ட தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகத் தயாரிப்பு நிறுவனம் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளது.
