‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு தலைமை நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தணிக்கை வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்தப் படத்தை தற்போது ‘மறு ஆய்வுக் குழுவின்’ (Revising Committee) பரிசீலனைக்கு அனுப்பியிருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

​இந்தத் தகவலைக் கேட்ட நீதிபதிகள், மறு ஆய்வு நடைமுறைகளை முடிப்பதற்கு இன்னும் எத்தனை நாட்கள் ஆகும் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தணிக்கை வாரியம், இந்த ஆய்வை முடிக்க இன்னும் 20 நாட்கள் வரை கால அவகாசம் தேவைப்படும் என்று கூறியுள்ளது. தணிக்கை வாரியத்தின் இந்த இழுபறியால் படத்தின் வெளியீடு இன்னும் சில வாரங்களுக்குத் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளதால், படக்குழுவினர் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.