’ஜனநாயகன்’ பட விவகாரத்தில் தணிக்கை வாரியம் இன்று நீதிமன்றத்தில் ஒரு மிக முக்கியமான பாயிண்ட்டை முன்வைத்துள்ளது. “நாங்கள் இந்தப் படத்தை மறு ஆய்வுக்குழுவுக்கு அனுப்ப ஏற்கனவே முடிவு செய்திருந்தோம், ஆனால் அந்த நேரத்தில் தான் படக்குழுவினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். நீங்கள் மட்டும் வழக்குத் தொடராமல் இருந்திருந்தால், இந்நேரம் மறு ஆய்வு முடிந்து படத்திற்கான ஒரு முடிவு எட்டப்பட்டிருக்கும்” என்று கூறி ஒட்டுமொத்தப் பழியையும் படக்குழு பக்கமே திருப்பியுள்ளனர்.
மேலும், ஒருவேளை மறு ஆய்வுக்குழுவும் படத்திற்குச் சான்றிதழ் வழங்க மறுத்தால், அதற்குப் பிறகு சட்டப்படி உயர்நீதிமன்றத்தை அணுகுவதே சரியான வழிமுறை என்றும் சென்சார் போர்டு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. “முறையான படிநிலைகளைத் தாண்டாமல் நேரடியாக நீதிமன்றத்திற்கு வந்ததுதான் காலதாமதத்திற்கு மிக முக்கியக் காரணம்” என்று வாரியம் வாதிட்டதால், ஹைகோர்ட்டில் இந்த விவகாரம் இப்போது இன்னும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
