ரஷ்யாவில் பொதுமக்களுக்கு இடையூறாக நடுரோட்டில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்த புலம்பெயர்ந்த நபர் ஒருவரை, உள்ளூர் குடிமகன் ஒருவர் பிடித்து மிகக் கடுமையாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூய்மையைக் கெடுக்கும் வகையில் அநாகரீகமாக நடந்துகொண்ட அந்த நபரை, அங்கிருந்த உள்ளூர்வாசி ஒருவர் சற்றும் தாமதிக்காமல் தடுத்து நிறுத்திக் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
Rusya'da bir vatandaş, sokak ortasına işeyen göçmene sert bir şekilde müdahale etti. pic.twitter.com/0f6jfOhoRe
— Haberin Var Mı? (@HVMHaber) June 17, 2026
ஆனாலும் அந்த நபர் தனது செயலை நிறுத்தாமல் அலட்சியமாக இருந்ததால், கோபமடைந்த அந்த உள்ளூர்வாசி அவரை நடுரோட்டிலேயே வச்சு வெளுத்து வாங்கி அங்கிருந்து விரட்டியடித்துள்ளார். பொது இடங்களில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்காதவருக்குக் கிடைத்த இந்த மரண அடி குறித்த வீடியோ காட்சிகள், தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.
