மத்தியப்பிரதேச மாநிலம் சிந்த்வாரா நகரில் பெற்றோரின் கவனக்குறைவால் கார் ஒன்றிற்குள் சிக்கிக்கொண்ட ஒன்றரை வயதுக் குழந்தை, பொதுமக்களின் துரித நடவடிக்கையால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. திங்கள்கிழமை மாலை பவாரா சௌக் பகுதியில் ஷாப்பிங் செய்யச் சென்ற ஒரு தம்பதியினர், குழந்தையை காருக்குள் விட்டுச் சென்றபோது கார் தானாகவே பூட்டிக்கொண்டது.
மேலும் நீண்ட நேரம் காருக்குள் சிக்கிய குழந்தை மூச்சுத் திணறல் ஏற்பட்டு கதறி அழுவதைக் கண்ட அந்த வழியாகச் சென்றவர்கள், உடனடியாகக் கூடி குழந்தையை மீட்க முயன்றனர். குழந்தையின் பெற்றோரைக் காணாத நிலையில், அங்கு இருந்த நிலேஷ் என்ற இளைஞர் துணிச்சலுடன் காரின் கண்ணாடியை உடைத்து குழந்தையை பத்திரமாக வெளியே எடுத்தார்.
MP : छिंदवाड़ा में कार में फंसा डेढ़ साल का मासूम बच्चा, माता-पिता शॉपिंग करने चले गए
◆ लोगों ने कांच तोड़कर सुरक्षित बाहर निकाला
◆ कार के अंदर बच्चा घबराकर रोने लगा, तभी लोगों ने मदद की #MadhyaPradesh | Madhya Pradesh pic.twitter.com/KAubPFukCW
— News24 (@news24tvchannel) January 14, 2026
“>
இதனால் சிறிது நேரம் கழித்து வந்த பெற்றோரிடம் பொதுமக்கள் தங்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். இன்னும் சில நிமிடங்கள் தாமதித்திருந்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பெற்றோரின் இந்த பொறுப்பற்ற செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
