உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னூர் மாவட்டம் நந்த்பூர் கிராமத்தில் உள்ள ஒரு பழமையான அனுமன் கோவிலில், கடந்த 48 மணி நேரத்திற்கும் மேலாக நாய் ஒன்று தொடர்ந்து அனுமன் சிலையைச் சுற்றி வந்து (பிரதட்சணம்) வழிபாடு நடத்தி வரும் அதிசயம் நிகழ்ந்து வருகிறது.
திங்கட்கிழமை அதிகாலை 4 மணி முதல் உணவு, உறக்கம் இன்றி இடைவிடாது சுற்றி வரும் இந்த நாயின் பக்திப் பரவசத்தைக் கண்டு அந்தப் பகுதி மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். இந்தச் செய்தி காட்டுத்தீயாகப் பரவியதால், அக்கம்பக்கத்து கிராமங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து இந்த விசித்திரமான காட்சியைக் கண்டு “ஜெய் பஜ்ரங்பலி” என கோஷமிட்டு வணங்கிச் செல்கின்றனர்.
ये कुत्ता पिछले तीन दिन से जिला बिजनौर नंदपुर गॉव नगीने के पास हनुमान ज़ी के मंदिर मे बजरंगबली ज़ी कि मूर्ति के चककर काट रहा है दिन रात इस दौरान एक बार बैठ गया था तो कुत्ते के ऊपर एक कबूतर आकर बैठ गया कुछ ही समय बाद कोई कबूतर मर गया,,, प्रभु कि लीला है सब pic.twitter.com/VMPJJr2xqS
— Amar Mishra (@Anti_LJ_Force) January 14, 2026
“>
இந்த அதிசய நிகழ்வை அப்பகுதி மக்கள் இறைவனின் அற்புதமாகவே கருதுகின்றனர்; சிலர் கால பைரவரே நாய் வடிவில் வந்து அனுமனை வழிபடுவதாக நம்புகின்றனர். அந்த நாய் யாருக்கும் எந்தத் தீங்கும் விளைவிக்காமல் அமைதியான முறையில் தனது பிரதட்சணத்தைத் தொடர்ந்து வருகிறது.
மேலும் குளிரில் இருந்து அதைப் பாதுகாக்க கிராம மக்கள் தார்ப்பாய் வசதிகளைச் செய்து கொடுத்துள்ளனர். அந்தப் பழமையான கோவில் ஏற்கனவே புகழ்பெற்ற தலம் என்றாலும், ஒரு வாயில்லா ஜீவன் காட்டும் இந்த அபூர்வ பக்தி அங்குள்ள மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
