உத்தரப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், தனது ஆசிரியையின் மீது மிகுந்த பாசம் கொண்ட மாணவி ஒருவர் கொடுத்த அன்பளிப்பு, சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்களின் மனதைக் கவர்ந்துள்ளது.

ஆசிரியை திவ்யா  என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த இந்த வீடியோவில், புன்னகையுடன் வகுப்பறைக்குள் வரும் சிறுமி ஒருவர், காகிதத்தில் சுற்றப்பட்ட இனிப்பை தன் ஆசிரியையிடம் வழங்குகிறார். “இது என்ன?” என்று ஆசிரியை கேட்க, “மிட்டாய்” என்று உற்சாகமாகக் கூறிய சிறுமி, “இது உங்களுக்காக, அப்பா மும்பையிலிருந்து கொண்டு வந்தார்” என்று கூறுகிறாள்.
<a href=”http://

 

View this post on Instagram

 

A post shared by Divya dj (@divyadj762)

“>
விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை விட, பாசத்துடன் அளிக்கப்பட்ட அந்த இனிப்பு தனக்கு மிகவும் விலைமதிப்பற்றது என ஆசிரியை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த பாசமிகு தருணம் சமூக ஊடகங்களில் பலரையும் உருக வைத்துள்ளது. நெட்டிசன் ஒருவர், “இந்த பரிசு விலை உயர்ந்த பரிசுகளை விட மதிப்புமிக்கது” என்று பதிவிட்டுள்ளார்.