தனியார் பள்ளி மாணவர்களுக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் இடையிலான டிஃபின் பாக்ஸ்  வேறுபாடு, சமூகத்தில் நிலவும் வறுமையையும், ஏற்றத்தாழ்வையும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக உள்ளது. அண்மையில், இதுபோன்ற ஒரு உணர்வுபூர்வமான காணொளி இணையத்தில் வைரலாகி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வறுமையின் பிடியில் இருக்கும் ஒரு சிறுவன், தனது மதிய உணவாக சர்க்கரையுடன் கூடிய ரொட்டியை எடுத்து வந்திருந்தான். இதை அந்தச் சிறுவனின் ஆசிரியை பார்த்ததும், அவனை சிறுமைப்படுத்தாமல், மாறாகப் புன்னகைத்து, “மாஷா அல்லாஹ், என்ன ஒரு அருமையான உணவு!” என்று பாராட்டினார். அதோடு மட்டுமல்லாமல், வகுப்பறையில் இருந்த மற்ற மாணவர்களையும் ரொட்டி-சர்க்கரை உணவுக்காகக் கைதட்ட வைத்து, அந்த ஏழைக் குழந்தையின் தன்னம்பிக்கையைத் தட்டி எழுப்பினார்.
<a href=”http://

“>
மேலும், மறுநாள் அனைவரும் ரொட்டியுடன் சர்க்கரை கொண்டு வர முடியுமா? என்று கேட்டு, ஒட்டுமொத்த வகுப்பையும் அந்த எளிய உணவைக் கொண்டாடும் மனநிலைக்கு மாற்றினார். ஒரு மாணவனின் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, மற்றவர்களின் கேலிக்கு ஆளாகாமல் அவனைக் காத்து, தன்னம்பிக்கையை ஊட்டிய அந்த ஆசிரியையின் செயல், 42 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று, நெட்டிசன்களின் பெரும் பாராட்டுக்குரியதாக மாறியுள்ளது.