இயற்கையின் விந்தைகளில் சில நம்மை எப்போதும் ஆச்சரியப்படுத்தும். சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், பாம்புக்கும் கீரிக்கும் இடையில் நடந்த ஒரு பயங்கரமான சண்டை பதிவாகியுள்ளது. இந்த இரண்டு விலங்குகளுக்கும் இடையேயான பகைப் பற்றி நாம் அறிந்ததே. அவை சந்திக்கும் போது சண்டை தவிர்க்க முடியாதது. இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோவில், ஆரம்பத்தில் நாகப்பாம்பு சீற்றம் கொண்டு, படம் எடுத்து கீரியை ஆக்ரோஷமாக தாக்குகிறது.
தாக்குதலில் இருந்து கீரி தப்பித்து ஓடினாலும், சண்டையில் இருந்து அது பின்வாங்கவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில், கீரி புத்திசாலித்தனமாகப் பாம்பின் பின்புறம் சென்று அதன் கூர்மையான பற்களால் அதைப் பிடித்துக் கொள்கிறது. நாகப்பாம்பு கடுமையாகத் தாக்கியும், இறுதியில் கீரியே வெற்றி பெறுகிறது.
A must watch battle | mongoose Vs cobra
Philippians 4:13 NIV
[13] I can do all this through him who gives me strength.👇 pic.twitter.com/aAu5Pu5Rvq— vutuuuu 😂😂😂😂 (@vutuuuu4) December 14, 2025
“>
இந்த 39 விநாடி வீடியோவை சமூக ஊடகங்களில் பல லட்சக்கணக்கான மக்கள் பார்த்துள்ளனர். “ஒவ்வொரு கொலையாளிக்கும் இயற்கையில் ஒரு கொலையாளி உண்டு” என்று ஒருவர் கருத்துத் தெரிவிக்க, “இயற்கையின் போர்கள் கடினமானவை, ஆனால் கடவுளிடம் இருந்து வலிமை வருகிறது என்பதை இந்த வீடியோ நினைவூட்டுகிறது” என்று மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார். இயற்கையின் இந்தச் சண்டையின் முடிவைப் பார்த்து பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.
