சர்க்கரைக்கு மாற்றாக ஆரோக்கியமான உணவாகக் கருதப்படும் வெல்லம், ஒரு தொழிற்சாலையில் எவ்வளவு அசுத்தமான முறையில் தயாரிக்கப்படுகிறது என்பது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், வெல்லம் தயாரிக்கும் இடம் மிகவும் மோசமாகவும், சுகாதாரமற்ற முறையிலும் இருப்பதை மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தொழிலாளர்கள் காலணிகளுடன் அந்த இடத்தைச் சுற்றி வருவதும், கரும்புச் சாறு கொதித்து கெட்டியானதும் அது நேரடியாக அழுக்கு படிந்த தரையில் கொட்டப்படுவதும் பார்ப்பவர்களை அருவருப்படையச் செய்துள்ளது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர். பார்ப்பதற்கு வெல்லம் போலவே தெரியவில்லை என்றும், ஏதோ சாலை அமைக்கும் சிமென்ட் கலவை போல இருப்பதாகவும் பலர் கிண்டல் செய்துள்ளனர்.
“வெல்லம் சாப்பிடும்போது ஏன் மணலும் கற்களும் கடிக்கிறது என்பது இப்போதுதான் புரிகிறது” என்று ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார்.
View this post on Instagram
“>
ஆரோக்கியத்திற்காக வெல்லத்திற்கு மாறியவர்கள், இந்த வீடியோவைப் பார்த்த பிறகு இனி வெல்லம் வாங்குவதற்கு முன் நூறு முறை யோசிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
