வனவிலங்கு வீடியோக்கள் எப்போதும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துபவை. அந்த வகையில், போலந்து நாட்டின் மிருகக்காட்சிசாலையில் படம்பிடிக்கப்பட்ட ஒரு சுவாரஸ்யமான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், தன்னை விட பல மடங்கு பெரிய மற்றும் வலிமையான காண்டாமிருகத்தை, ‘முன்ட்ஜாக்’ எனப்படும் ஒரு சிறிய வகை மான் தைரியமாக எதிர்த்து நிற்கிறது.

நாயைப் போலக் குரைக்கும் சத்தம் எழுப்பும் இந்த மான், காண்டாமிருகத்தை மிரட்ட முயல்வதும், அதைக் கண்டு காண்டாமிருகம் பயந்து பின்வாங்குவது போன்ற வேடிக்கையான காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

உண்மையில் அந்த காண்டாமிருகம் மானைத் தாக்க நினைக்காமல், அதனுடன் விளையாடும் மனநிலையில் இருப்பதே இந்த வீடியோவின் சிறப்பம்சமாகும். சுமார் 28 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவை  (X)தளத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் ரசித்துப் பார்த்துள்ளனர்.

“>

 

“இவ்வளவு சிறிய உடலில் இவ்வளவு பெரிய போர்வீரனா?” என்று நெட்டிசன்கள் வியந்து பாராட்டி வருகின்றனர். உருவத்தில் சிறியதாக இருந்தாலும் துணிச்சலுடன் செயல்படும் இந்த மானின் வீடியோ, சமூக வலைதளங்களில் பலரது இதயங்களை வென்றுள்ளது.