இன்றைய நவீன உலகில் கடினமான வேலைகளைக் கூட எளிதாக்கும் பல சிறிய இயந்திரங்கள் புழக்கத்திற்கு வந்துவிட்டன. அந்த வகையில், ஒரு ஸ்டேப்லர் அளவே உள்ள மிகச்சிறிய தையல் இயந்திரத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தெருவோர வியாபாரி ஒருவர் விற்கும் இந்த மினி தையல் இயந்திரம், பார்ப்பதற்கு ஒரு பொம்மை போல இருந்தாலும், துணிகளை மிக வேகமாகவும் அழகாகவும் தைக்கிறது. மின்சாரம் தேவையில்லை, பெரிய இயந்திரங்களைத் தூக்க வேண்டிய அவசியமில்லை; ஸ்டேப்லரை அழுத்துவது போலவே கைகளால் அழுத்தி இதை இயக்க முடியும்.

வெறும் 100 ரூபாய் மட்டுமே விலையுள்ள இந்த தையல் இயந்திரத்தின் வீடியோ, எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்டு லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. “சிறிய பொட்டலத்திற்குள் பெரிய வெடிப்பு” என்று பலரும் இதனைப் பாராட்டி வருகின்றனர்.

அவசர காலங்களில் துணிகளில் ஏற்படும் சிறு கிழிசல்களைச் சரிசெய்ய இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“>

 

இந்தியர்களின் யோசனைக்கு ,குறைந்த விலையில் கிடைக்கும் தொழில்நுட்பத்திற்கும் இந்தச் சிறிய இயந்திரம் ஒரு சிறந்த உதாரணமாகப் பார்க்கப்படுகிறது.